Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மூதாட்டியை தாக்கி தாலியை பறிக்க முயற்சி-பரபரப்பு

திருப்பத்தூர் அருகே காலைகடன் கழிக்க சென்ற மூதாட்டியை சரமாரியாக தாக்கி தாலியை பறிக்க முயன்ற மர்ம நபரால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராவத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மனைவி சரஸ்வதி (61) என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 5.45 மணியளவில் மூதாட்டி சரஸ்வதி இயற்கை உபாதை கழிப்பதற்காக ஏரிக்கரை பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென மூதாட்டியை சரமாரியாக தாக்கி அவர் அணிந்திருந்த தாலியை பறிக்க முயற்சி செய்துள்ளார்.

பின்னர் அந்த மர்மநபர் மூதாட்டி சரஸ்வதியை தாக்கியதில் பல் உடைந்ததுடன் கண்ணிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி கத்தி கூச்சலிட்டுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த மூதாட்டியின் கணவர் கோவிந்தராஜ் அவரது மனைவியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதற்கிடையில் தாலியை பறிக்க முயன்ற மர்ம நபர் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி உள்ளார்.

இச்சம்பவம் குறித்து மூதாட்டி சரஸ்வதி திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

அதிகாலையில் மூதாட்டியை தாக்கி தாக்கி தாலி பறிக்க முயன்ற
மர்ம நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

error: Content is protected !!