தீபாவளியை முன்னிட்டு சென்னையில் விமான கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, தூத்துக்குடிக்கு செல்லும் விமான கட்டணம் 2 மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி, வழக்கமாக ரூ.8,000-ஆக இருக்கும் சென்னை – தூத்துக்குடி விமான கட்டணம் இன்று ரூ.16,000 முதல் ரூ.17,300 வரை உயர்ந்துள்ளது. அதேபோல், வழக்கமாக ரூ.5,600-ஆக இருக்கும் சென்னை – திருச்சி விமான கட்டணம் இன்று ரூ.14,800 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமான கட்டணம் ரூ.16,969 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
தீபாவளி எதிரொலி: சென்னையில் விமான கட்டணம் கிடுகிடு உயர்வு!
