திருச்சி பால்பண்ணை மகாலட்சுமி நகர் சேர்ந்தவர் தினேஷ்(27). இவர் சரக்கு வாகனத்தில் வெங்காயம் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5-ந்தேதி அரியமங்கலம் எஸ்.ஐ.டி. கணபதி நகரில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், அவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அதற்கு அவர் பணம் தர மறுக்கவே, கத்தி காட்டி மிரட்டி தினேஷ் சட்டைப்பையில் இருந்த ரூபாய் 2000 பறித்து சென்றனர். இது குறித்து அவர் அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அரியமங்கலம் பகுதியை சேர்ந்த அருண்குமார் 35, தீபன் 26 , மணிகண்டன் 24 ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து2 இரு சக்கர வாகனங்கள், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சியில் வெங்காய வியாபாரியிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு
