திருச்சி சோமரசம்பேட்டை அருகே சொந்த ஊரில் கட்டிய வீட்டைப் பார்க்க மனைவி ராதிகா வர மறுத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ராதிகா படுக்கையறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் செல்வம், மனவேதனையில் அதே மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி அருகே கணவன்-மனைவி தற்கொலை
