பஞ்சாப் மாநிலம் அம்பாலாவில் கர்மபூமி விரைவு ரயிலில் இன்று (நவ.6) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சராய் பஞ்சா ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டிருந்தபோது, திடீரென ஒரு பெட்டியில் தீப்பற்றியது. காற்றின் வேகத்தால் அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் தீ பரவி மொத்தம் 4 பெட்டிகள் தீக்கிரையாகின. முன்னெச்சரிக்கையாக ரயில் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை.
பஞ்சாப்பில் கர்மபூமி விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து
