Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

4 பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு: ஹாலிவுட் நடிகருக்கு சிறை!

4 பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு: ஹாலிவுட் நடிகருக்கு சிறை!

நான்கு பெண்களை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரசல் பிராண்ட் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகரான ரசல் பிராண்ட் (51), பல ஹாலிவுட் திரைப்படங்கள், வானொலி நிகழ்ச்சிகள் மற்றும் அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரியின் முன்னாள் கணவர் என சர்வதேச அளவில் பிரபலமானவர் ஆவார். மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி பெண்களிடம் எல்லைமீறி நடந்து கொண்டதாக இவர் மீது ஏற்கனவே பல புகார்கள் இருந்து வந்தன.

இந்த சூழ்நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு பெண்களை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் மற்றும் அத்துமீறல் செய்ததாக இவர் மீது லண்டன் சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், ‘பெண்களை இரக்கமின்றி சூறையாடிய ஒரு கொடூரமான பாலியல் வேட்டைக்காரன்’ என்று இந்த காமக் கொடூரனுக்கு எதிராக மிகக் கடுமையான வாதங்களை முன்வைத்தார்.தன் மீதான குற்றங்களை ரசல் பிராண்ட் முற்றிலுமாக மறுத்த போதிலும், இரண்டு நாட்கள் தீவிர விசாரணைக்கு பின்னர் 8 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் அடங்கிய நடுவர் குழுவினர் அவரை குற்றவாளி என உறுதி செய்தனர். இதையடுத்து நீதிபதி ஜோயல் பென்னதன் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த கொடூர குற்றங்களுக்கு சிறை தண்டனை மட்டுமே சரியான தீர்வு’ என்று கூறி ரசல் பிராண்டை உடனடியாக நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தண்டனை விபரங்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!