மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைகட்டியது. நேற்று (நவ.5) நடைபெற்ற சந்தையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் குவிந்தனர். ஒரு ஆடு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. ஒரே நாளில் ரூ.7 கோடிக்கும் மேல் வர்த்தகம் நடைபெற்றதாக சந்தை குத்தகைதாரர்கள் தெரிவித்தனர்.
தீபாவளி பண்டிகை.. ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை
