சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புரண்டி கிராமத்தில் தீபாவளிப் பண்டிகையன்று பிரபல ரவுடி நவீன் என்பவரை ஓட ஓட விரட்டி மிகக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த வழக்கில், கல்லல் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வந்த தனிப்படை போலீசார், விக்கி (32), முத்துப்பாண்டி (25), சிவா (25), சந்தோஷ்குமார் (23), சிவா (27), சரவணன் (34), சதீஷ் (28) ஆகிய 7 பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்
காரைக்குடி ரவுடி நவீன் கொலை வழக்கு: 7 பேர் கைது
