Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எண்ணூர் கடலில் மாயமான மாணவர் சடலமாக மீட்பு!

எண்ணூர் கடலில் மாயமான மாணவர் சடலமாக மீட்பு!

சென்னை, எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரையில் குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கி மாயமான கல்லூரி மாணவர் முகமது பைசல் (18), எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டார். பொன்னேரி பகுதியைச் சேர்ந்த டைலர் முகமது அலியின் மகனான முகமது பைசல், J.N.N கல்லூரியில் 2ம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வந்துள்ளார்.

நேற்று தனது நண்பர்கள் 5 பேருடன் கிரிக்கெட் விளையாடச் செல்வதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்ற வாலிபர், நண்பர்களுடன் எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரையில் குளித்துள்ளார். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி முகமது பைசல் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார்.

இதனை அடுத்து, நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் பெற்றோரும் உறவினர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையினரும், நீச்சல் வீரர்களும் கடலில் இறங்கித் தேடினர். நேற்று மாலை முழுவதும் தேடியும் அவரது உடல் கிடைக்காத நிலையில், இன்று காலை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரையில் முகமது பைசலின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.

error: Content is protected !!