வங்கக்கடலில் இருக்கும் தமிழக மீனவர்கள் நாளை இரவுக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் (நவ.13) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, பின்னர் வலுப்பெற்று புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், கடலுக்குள் அனைத்து வகையான படகுகளும் உடனடியாக கரைக்கு திரும்பி பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும். மறு உத்தரவு வரும் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் நாளை இரவுக்குள் கரைக்கு திரும்ப உத்தரவு
