ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கீழ்வீதி கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுமார் (70). இவர் நேற்று இரவு முன்பகை காரணமாக மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக நெமிலி காவல்துறையினர் 7 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
