கும்பகோணம் நகரில் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இராமசாமி ஆலயத்தில் இன்று திருப்பணி துவங்கியது . அடுத்த ஆண்டு திருப்பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்கு விழா நடத்தப்படும்.
நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தில் கும்பகோணம் நகரில் கட்டப்பட்டது இராமசாமி ஆலயம் .
சிற்பங்கள் நிறைந்த இந்த ஆலயம் ,மகாமகம் தொடர்புடைய 5 வைணவ ஆலயங்களில்

ஒன்றாக விளங்குகிறது .
சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான திருப்பணிகள் இன்று துவங்கியது,

திருப்பணிகள் துவக்கத்திற்கான பாலாலயம் எனும் சம்பிரதாய நிகழ்வு இன்று நடைபெற்றது .
கும்பகோணம் நகரில் 2028 ஆம் ஆண்டு மகாமக விழா நடைபெற உள்ளது .ஏற்கனவே கடந்த ஆண்டு ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த ஆலயத்தினை தவிர மற்ற அனைத்து ஆலயங்களிலும் மகாமக விழாவிற்கு முன்னதாக குடமுழுக்கு விழா நடைபெறும்.
