திரிபுரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 345 உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் வரும் நவம்பர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், மனுத்தாக்கல் முடிவில் மாற்று வேட்பாளர்கள் யாரும் களத்தில் இல்லாததால், தேர்தலுக்கு முன்பாகவே 77 இடங்களை பாஜக போட்டியின்றித் தன்வசப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, மீதமுள்ள 268 உள்ளாட்சி இடங்களுக்கு மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது எனத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிபுராவில் தேர்தலுக்கு முன்பே 77 இடங்களில் பாஜக வெற்றி
