புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா வெளியிட அதனை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இ.அபிநயா பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் , வருவாய் கோட்டாட்சியர்கள் மு.காளீஸ்வரி (அறந்தாங்கி), கே.எம்.தமீம் ராசா (இலுப்பூர்), மாவட்ட வழங்கல் அலுவலர் ஷோபா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரவி , உதவி ஆணையர் (கலால்) ஸ்ரீதர் , வட்டாட்சியர் (தேர்தல்) அ.செந்தமிழ்குமார், வட்டாட்சியர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள்; மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
புதுக்கோட்டையில் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியீடு

Tags:புதுக்கோட்டை (tag)