Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் தண்ணீரின்றி 600 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் கருகும் அவலம்!

தஞ்சை மாவட்டத்தில் சுமார் 600 ஏக்கர் சம்பா நெல்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கருகி வருகிறது

பாலைவனம் போல் வெடித்து காணப்படும் வயலில் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி கருகி வரும் நெல் பயிரை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ம் தேதி கண்ணீர் திறக்காத காரணத்தால் டெல்டா

மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடைபெறாத நிலையில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது

இதனை நம்பி தஞ்சை மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனர்

இந்த நிலையில் மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாத காரணத்தால் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது

இதன் காரணமாக தஞ்சை மாவட்டம் நல்ல வன்னியன் குடிகாடு சங்கரதேவன் குடிகாடு மலையர் நத்தம் உள்ளிட்ட 6 கிராமங்களில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்ட சம்பா நெல் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கருகி வருகிறது

விளைநிலங்கள் பாலைவனம் போல் வெடித்து காணப்படுகிறது

அரசை நம்பி நடவு செய்த நாங்கள் செய்வதறியாமல் திகைத்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து வயலில் ஊற்றி காய்ந்து வரும் நெற்பயிர்களை காப்பாற்ற போராடி வருவதாக தெரிவிக்கும் விவசாயிகள்

வட்டிக்கு கடன் வாங்கி நகைகளை அடகு வைத்து ஏக்கர் ஒன்றுக்கு 45 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து நடவுப் பணிகள் மேற்கொண்டுள்ள நிலையில் பயிர்கள் காய்ந்து வருவதால்

மாடுகளை விட்டு மேய்க்க விடும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இயற்கை ஒத்துழைத்து மழை பெய்தால் நட்ட பயிரை அறுத்து பொங்கல் சிறப்பாக கொண்டாட முடியும் இல்லை என்றால் பொங்கல் கேள்விக்குறியாகி விடும் என வேதனை தெரிவித்தனர்.

அதிகாரிகள் கள ஆய்வு செய்து பாதிப்புகள் குறித்து அரசுக்கு தெரிவித்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கையை விடுத்துள்ளனர்

error: Content is protected !!