செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 11,34,941 ஆண் வாக்காளர்கள், 11,91,498 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 383 என மொத்தம் 23,26,822 வாக்காளர்களும் 422 சேவை வாக்காளர்களும் உள்ளனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில், 2027ம் ஆண்டுக்க சிறப்பு சுருக்கத் திருத்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் மு.வீரப்பன் வெளியிட்டார்.
அதன்படி, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், வரும் 2027ம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கருத்தில் கொண்டு, 18 வயது பூர்த்தியடைந்த நபர்களையும் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு உள்ளது.
இந்திய செய்திகள்
இப்பட்டியலின்படி, சோழிங்கநல்லூர் தொகுதியில் 2,72,898 ஆண் வாக்காளர்கள், 2,85,714 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 117 என மொத்தம் 5,58,729 வாக்காளர்கள் மற்றும் 73 சேவை வாக்காளர்கள் உள்ளனர். பல்லாவரம் தொகுதியில் 1,65,133 ஆண் வாக்காளர்கள், 1,73,531 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 22 என மொத்தம் 3,38,686 வாக்காளர்கள் 58 சேவை வாக்காளர்கள் உள்ளனர். தாம்பரம் தொகுதியில் 1,61,639 ஆண் வாக்காளர்கள், 1,70,944 பெண் வாக்காளர்கள், 53 இதர வாக்காளர்கள் என மொத்தம் 3,32,636 வாக்காளர்கள் மற்றும் 123 சேவை வாக்காளர்கள் உள்ளனர்.
செங்கல்பட்டு தொகுதியில் 1,83,333 ஆண் வாக்காளர்கள், 1,94,483 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 56 என மொத்தம் 3,77,872 வாக்காளர்கள் மற்றும் 48 சேவை வாக்காளர்கள் உள்ளனர்.
திருப்போரூர் தொகுதியில் 1,45,087 ஆண் வாக்காளர்கள், 1,53,371 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 52 என மொத்தம் 2,98,510 வாக்காளர்கள் மற்றும் 43 சேவை வாக்காளர்கள் உள்ளனர். செய்யூர் (தனி) தொகுதியில் 1,01,464 ஆண் வாக்காளர்கள், 1,03,986 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 19 என மொத்தம் 2,05,469 வாக்காளர்கள் மற்றும் 50 சேவை வாக்காளர்கள் உள்ளனர். மதுராந்தகம் (தனி) தொகுதியில் 1,05,387 ஆண் வாக்காளர்கள், 1,09,469 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 64 என மொத்தம் 2,14,920 வாக்காளர்கள் மற்றும் 27 சேவை வாக்காளர்கள் உள்ளனர்.
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 11,34,941 ஆண் வாக்காளர்கள், 11,91,498 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 383 என மொத்தம் 23,26,822 பேர் மற்றும் 422 சேவை வாக்காளர்கள் உள்ளனர் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பர்ஹத் பேகம், மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் வெங்கடாசலம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பவானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
