தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும் மொத்தம் 5.77 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 2.82 கோடி பேர் ஆண்கள், 2.95 கோடி பேர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள டிசம்பர் 11ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஜனவரி 4ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 5.77 கோடி வாக்காளர்கள்.. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
