பீகாரின் முங்கரில் ஓய்வுபெற்ற ரயில் லோகோ பைலர் ஒருவர் தனது மனைவியை குத்திக் கொன்றுள்ளார். தசரத் மண்டல் (55) என்பவர், தனது 28 வயது மனைவி பூஜா தேவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். வாக்குவாதத்தின்போது மனைவியைத் தாக்கிப் படுகொலை செய்த தசரத், பின்னர் தனது இரு சிறு மகள்களுடன் காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். வரதட்சணை கொடுமை காரணமாகவே இக்கொலை நடந்ததாகப் பெண்ணின் சகோதரர் புகாரளித்துள்ளார்.
மனைவியை குத்திக் கொன்ற ஓய்வுபெற்ற ரயில் ஓட்டுநர்
