Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பதி வெங்கடாசலபதி ஓவியம் வரைந்த கோவில்பட்டி ஓவியர் காலமானார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையைச் சேர்ந்த பிரபல ஓவியர் சீனிவாசன் (86) வயது மூப்பால் காலமானார். 1970-ம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானத்தின் அழைப்பின் பேரில், கோயில் கருவறையில் உள்ள வெங்கடாசலபதி சிலை வடிவத்தை நேரில் பார்த்து ஓவியமாக வரைந்தார். நகைகளுடனும், நகைகள் இல்லாமலும் அவர் வரைந்த ஓவியங்களை திருப்பதி தேவஸ்தானம் அங்கீகரித்தது. பின்னர் இந்த ஓவியங்கள் புகைப்படங்களாகவும், காலண்டர்களிலும் அச்சிடப்பட்டு வீடுகள், கடைகளில் இடம்பெற்றன. அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

error: Content is protected !!