தமிழகத்தில் அடுத்த ஆண்டு குறைந்த விலையில் மின்சாரம் வாங்க டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL / TANGEDCO) 2027-ம் ஆண்டு கோடை காலத்தை (Summer Season Jan to June) சமாளிக்க வெளியிட்டுள்ள 5 முக்கிய மின்சார கொள்முதல் டெண்டர்கள் (Electricity Procurement Tender) ஓபன் ஆகியுள்ளன. ஜனவரி முதல் ஜூன் வரை தமிழகத்தில் மின் தேவை உச்சத்தில் இருக்கும். தேர்வு, கோடை, விவசாயம், ஏசி பயன்பாடு என தேவை அதிகரிக்கும். அதனால் வார நாட்களில் மட்டும் (Weekdays Only) மின்சாரம் வாங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு யூனிட்டுக்கு 9.5 ரூபாய் முதல் 13 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு டெண்டர் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கியது சர்ச்சையான நிலையில் மின்வாரியம் இவ்வாறு முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு சாதாரணமாக மின்சாரம் வாங்கும் விலை ரூ.4 முதல் ரூ.5 தான்! ஆனால் இப்போது கோடைக்காக ரூ.9.50 முதல் ரூ.13 வரை கொடுத்து வாங்க வேண்டும். மாதம் 2000 மெகாவாட் என்றால், ஒரு நாளைக்கு கோடிக்கணக்கில் நஷ்டமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
