வரும் 2027-ம் ஆண்டு ஜன.15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (நவ.14) முதல் தொடங்கியுள்ளது. 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் விதியின்படி, ஜன.13-ம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் இன்றும், போகிப் பண்டிகையான ஜன.14-ம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் நாளையும் (நவ.15) முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பொங்கல் தினமான ஜன.15-ம் தேதி பயணிக்க வரும் 16-ம் தேதி முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
