இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 137வது பிறந்தநாள் இன்று (நவம்பர் 14) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, டெல்லியில் உள்ள சாந்திவனம் நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1889ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி பிறந்த ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள், நாடு முழுவதும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
நேருவின் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
