விருதுநகரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வாயில் ரத்தம் வழிந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வாயில் ரத்தம் வழிந்தபடி சடலமாகக் கிடந்துள்ளார். மேலும், அவர் அணிந்திருந்த 9 சவரன் தங்கச் செயின் மாயமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூதாட்டியின் மரணத்திற்கான காரணம் மற்றும் மாயமான நகை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
