சிவகங்கை மாவட்டத்தில் அரசு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22 கோடி மோசடி செய்ததாக 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில் 24 வங்கிக் கணக்குகளில் இருந்து இந்த பெரும் தொகை மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தற்போது தீவிர விசாரணை செய்து வருகின்றனர். வங்கிப் பணத்தை சட்டவிரோதமாகக் கையாண்டது தொடர்பாகப் பல்வேறு கோணங்களில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
அரசு வங்கி கணக்கில் இருந்து ரூ.22 கோடி மோசடி- 7 பேர் கைது
