தமிழ்நாட்டில் உள்ள பள்ளி வளாகங்களில் கல்வி சாராத மற்றும் அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை மீண்டும் தடை விதித்துள்ளது.
பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பள்ளி வளாகங்களில் கல்வி நடவடிக்கைகளுக்குத் தொடர்பில்லாத நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தமிழகத்தின் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்விச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
