Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காரியாபட்டியில் அரசு விடுதி இடிந்து விழுந்தது – மாணவிகள் உயிர்தப்பினர்!

காரியாபட்டி அருகே அரசு சமூகநீதி மாணவிகள் விடுதி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மல்லாங்கிணறில் அரசு சமூகநீதி மாணவிகள் விடுதி உள்ளது. இந்த விடுதி கட்டிடம் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இதை சீரமைக்க வேண்டும் என மாணவிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று அதிகாலை 4 மணியளவில் கட்டிடத்தின் கழிவறை, குளியலறை, ஸ்டோர் ரூம் ஆகியவை உள்ள பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

அப்போது மேற்புறம் இருந்த குடிநீர் தொட்டியின் பாரம் தாங்காமல் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் மாணவிகள் யாரும் அப்பகுதிக்கு செல்லவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தகவலறிந்த தாசில்தார் திருப்பதி தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை விடுதிக்கு வந்து பார்வையிட்டனர். இங்கு தங்கி படித்த மாணவிகளை அருகில் உள்ள தனியார் கட்டிடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘‘மல்லாங்கிணறில் உள்ள மாணவிகள் விடுதி கட்டிடம் சேதமடைந்து மோசமாக காணப்படுகிறது.

error: Content is protected !!