Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கடலூரில் பெண் தீக்குளிப்பு – வன்கொடுமை வழக்கு கோரி விசிக சாலை மறியல்!

கடலூரில் பெண் தீக்குளிப்பு – வன்கொடுமை வழக்கு கோரி விசிக சாலை மறியல்!

கடலூர்: கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை காவல் நிலையம் முன்பு பெண் ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஊராட்சி செயலாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி, தீக்குளித்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெண் தீக்குளித்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை கோரி நடைபெறும் சாலை மறியல் போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!