திருவண்ணாமலை செங்கம் சாலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த எல்லை காளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று (நவ.15) நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் பெண் பக்தர்களிடம் இருந்து சுமார் 15 சவரன் தங்க நகைகளைப் பறித்துச் சென்றுள்ளனர். நகைகளை இழந்த பெண்கள் அதிர்ச்சியில் கதறி அழுதனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கும்பாபிஷேக விழா கூட்ட நெரிசலில் 15 சவரன் நகை பறிப்பு
