Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சிஅருகே ரூ.2.15 லட்சம் மதிப்பிலான 324 கிலோ குட்கா பறிமுதல்

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.2,15,000 மதிப்புள்ள 324 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து
ள்ளனர்.

திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ், உத்தரவின் பேரில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த
வகையில் துவரங்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்
நடத்தப்பட்ட சோதனையில், சட்ட
விரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 324 கி குட்கா பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து குட்கா விற்பனையில் ஈடுபட்ட மருங்காபுரி, கஞ்சநாயக்கன்பட்டி அருகேயுள்ள கரடிப்பட்டியைச் சேர்ந்த பிச்சன் என்பவரது மகன் மலையாண்டி (வயது 45) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இது குறித்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட மலையாண்டி சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!