Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுரை அருகே கார்–லாரி மோதி இருவர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள நகரியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 5 பேர், திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றுவிட்டு காரில் மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது நகரி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!