சிவகாசி வடபட்டி பகுதியில் அதிமுக ஒன்றிய தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் ராஜாகனி (28) என்பவரை, பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதத்தை சமரசம் செய்து கொள்ளலாம் என கூறி, வீரசிங்கம் மற்றும் அவரது நண்பர்கள் ராஜாகனியை அழைத்து சென்று இந்த கொடூர கொலையை செய்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதிமுக நிர்வாகி பீர் பாட்டிலால் குத்திக் கொலை
