மதுரை தனிஷ்க் நகைக் கடையில் கொள்ளையில் ஈடுபட்டு தருமபுரி போலீசாரால் கைது செய்யப்பட்ட நிஷாந்த் மதுரை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மதுரை பிரபல நகை கடையில் கொள்ளை அடித்த முக்கிய குற்றவாளியான யூடியூபர் நிஷாந்த் பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி ஆம்ணி பேரு ந்து நிலையம் பயணம் செய்துள்ளார். அப்பொழுது நிஷாந்தை பார்த்தவுடன் சந்தேகம் அடைந்து, நடத்துனர் அவருக்கு நெருக்கமான நண்பர் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து அதியமான்கோட்டை காவல் துறையினர் ஆம்னி பேருந்து வருகையை நோக்கி சேஷம்பட்டி அருகே காத்திருந்துள்ளனர். பேருந்து சேஷம்பட்டி அருகே நள்ளிரவில் வந்த போது காவல்துறையினர் தடுத்து சோதனை செய்ய முயற்சித்து ள்ளனர். அப்பொழுது பேருந்து நின்றதை அறிந்த நிஷாந்த் காவல் துறையினர் இருப்பதால், தப்பிக்க ஜன்னல் வழியாக முயற்சி செய்துள்ளார். ஆனால் அதியமான் கோட்டை காவல்துறையினர் கைது செய்தனர். இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அருண் கபிலன் மதுரை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரனுக்கு தொடர்பு கொண்டு youtube நிஷாந்தை கைது செய்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மதுரையிலிருந்து வந்த தனிப்படை காவல் துறையினரிடம் தருமபுரி அதியமான் கோட்டை காவல் துறையினர் நிஷாந்தை ஒப்படைத்துள்ளனர் இதனையடுத்து குற்றவாளி நிஷாந்தை காவல் துறையினர் மதுரைக்கு அழைத்துச் சென்றனர். நிஷாந்த் அதியமான் கோட்டை மதுரையில் வைத்து தீவிரமாக விசாரிக்க காவல்துறை திட்டமீட்டுள்ளனர்.
