Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

துணை சபாநாயகர் மீது தாக்குதல் புகார் – புகார்தாரர் ஆஜர்!

துணை சபாநாயகர் ரவிசங்கர் தன்னைத் தாக்கியதாகக் கூறிப் புகார் அளித்த

துறையூர் நபர் திருச்சி எஸ் பி அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜர்

உயர் அதிகாரி இல்லாத காரணத்தால் திரும்பி சென்றார்

திருச்சி நவ 16-

துணை சபாநாயகர் ரவிசங்கர் தன்னைத் தாக்கியதாகக் கூறிப் புகார் அளித்த துறையூரைச் சேர்ந்த கார்த்திக் குமார், காவல்துறையின் சம்மனை ஏற்று இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகி உள்ளார்.

திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்தவர் கார்த்திக் குமார். இவர் துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கரை நேரில் சந்தித்து தனது ஊரில் நிலை வரும் குடிநீர் பிரச்சனை சாக்கடை பிரச்சனைக்கு தீர்வு காண கோரி அவரிடம் நேரில்
மனு அளிக்கச் சென்றார். அப்போது, துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆபாச வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கியதாக குற்றச் சாட்டு எழுந்தது. தன்னை தாக்கியதாக கார்த்தி குமார்
வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கார்த்திக் குமார்
மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்
ஆனால், அவரது புகாரின் பேரில் இதுவரை முதல் தகவல் அறிக்கை இன்னமும் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட கூடுதல் காவலர் கண்காணிப்பு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு
கார்த்திக் குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அந்த சம்மனின் அடிப்படையில், கார்த்திக் குமார் தனது வழக்கறிஞர் பொன் முருகேசனுடன் இன்று திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். ஆனால் ஏடிஎஸ்பி கொலை சம்பவம் விசாரணைக்காக சென்று விட்டதால் பின்னர் விசாரணை நடத்தப்படும் என கார்த்திக் குமாரிடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கார்த்திக் குமார், நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியதாவது :- இந்த
சம்பவத்தின் போது துணை சபாநாயகர் ரவிசங்கர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்தார். அப்போது அருகில் அவரது மகனும் அங்கிருந்த கட்டை ஒன்றை எடுத்து கொடுத்து அடிக்க சொன்னார். எனவே ரவிசங்கர் மகன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறினார். இதுகுறித்து கார்த்திக் குமார் வழக்கறிஞர் பொன். முருகேசன் அளித்த பேட்டியில்,
எப் ஐ ஆர் பதிவு செய்யாமல் விசாரணைக்காக சம்மன் அனுப்பக்கூடாது என்ற விதிமுறையை
மீறி ஏடிஎஸ்பி அலுவலகம் சம்மன் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்று கூறினார்.

error: Content is protected !!