திருச்சி மாவட்டம், தொண்டமான் பட்டி ரயில் நிலையம் அருகே இன்று (நவம்பர் 16) காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த இருப்புப்பாதை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்த நபரின் உடலை மீட்டு, திருச்சி அரசு பொது மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த நபரின் வலது மார்புப் பகுதியில் ‘ரங்கநாதன்’ என்றும், இடது மார்புப் பகுதியில் ‘பார்வதி’ என்றும் பச்சை குத்தப்பட்டுள்ளது. இதனை அடையாளக் குறிப்பாகக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், உயிரிழந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை. எனவே, இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளுமாறு இருப்புப்பாதை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொடர்புக்கு:
- 9443472524
- 9080563321
தொடர்பு நபர்: சிறப்பு உதவி ஆய்வாளர் ஸ்டாலின், இருப்புப்பாதை காவல் நிலையம், திருச்சிராப்பள்ளி.
