Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கர்ப்பமானதை அறியாமல் ஒரே நாளில் 100 சிகரெட் ஊதி தள்ளிய நடிகை

இளைய மகள் ஆலியா பட் வயிற்றில் இருந்ததை அறியாமல், படப்பிடிப்பின்போது ஒரே நாளில் 100 சிகரெட்டுகள் பிடித்ததாக நடிகை சோனி ரஸ்தான் தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டின் மனைவியும், மூத்த நடிகையுமான சோனி ரஸ்தான் முதல்முறையாக கர்ப்பம் தரித்தபோது மும்பையின் லோகண்ட்வாலா பகுதியில் வசித்து வந்தார். புதிதாக திருமணமான தம்பதி என்பதால் அந்த காலகட்டத்தில் போக்குவரத்து வசதியோ, சொந்த காரோ இல்லாமல் சிரமப்பட்டார். இதனை அறிந்த சிப்பி குழுவினர், காலை 6 மணிக்கு கார் அனுப்பி அவரை அழைத்து வந்தனர்.

மேலும் படப்பிடிப்பு தளத்தில் சிறந்த அறையை ஒதுக்கி அவரை மிகவும் அக்கறையுடன் கவனித்து கொண்டனர். தொடர்ந்து கடந்த 1988ம் ஆண்டு தம்பதியருக்கு ஷாஹீன் பட் என்ற முதல் மகள் பிறந்தார். இதன்பிறகு கடந்த 1993ம் ஆண்டு மகேஷ் பட் இயக்கிய கும்ரா படத்தில் சோனி ரஸ்தான் நடித்தார். அப்போது இளைய மகள் ஆலியா பட் வயிற்றில் இருந்ததை அறியாமலேயே அவர் நடித்து வந்தார். அப்படத்தின் காட்சி ஒன்றிற்காக ஒரே நாளில் சுமார் 100 சிகரெட்டுகள் புகைத்ததாக அவர் சமீபத்திய பேட்டியில் கூறினார்.

இதுகுறித்து அவர், ‘புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்தபோது ஒரே நாளில் 100 சிகரெட்டுகள் பிடித்திருப்பேன். அப்போது ஆலியா என் வயிற்றில் இருப்பது எனக்கு சுத்தமாக தெரியாது. உண்மையில் நான் சிகரெட் பிடிப்பவள் அல்ல, ஆனால் அதன்பிறகு எனக்கு சிகரெட் மீது ஆசை ஏற்பட்டது’ என்றார்.

error: Content is protected !!