திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் பகுதியில், திருமண நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் பலத்த காற்றில் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் அவ்வழியாகச் சென்ற செஞ்சைய்யா என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மனைவி கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரில் திருமண பேனர் விழுந்து கணவன் உயிரிழப்பு-மனைவி படுகாயம்
