Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாம்பரம்: காவல் நிலையங்களில் புதிய ஆணையர் ஆய்வு!

தாம்பரம் மாநகர புதிய காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா காவல் நிலையங்களில் நேரில் ஆய்வு பொதுமக்கள் புகார்களுக்கு உடனடி தீர்வு காண உத்தரவு

தாம்பரம் மாநகர காவல் ஆணையராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நஜ்முல் ஹோடா, இ.கா.ப. மாநகரப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

காவல் நிலையங்களின் செயல்பாடுகள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள்,

வழக்குகளின் நிலை ஆகியவற்றை நேரில் அறிந்து கொள்ளும் நோக்கில் இந்த ஆய்வு

நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மேடவாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட காவல் நிலையங்களுக்குச்

சென்ற ஆணையர் நஜ்முல் ஹோடா, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள் மற்றும் வழக்குக் கோப்புகளை ஒவ்வொன்றாகப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குறிப்பாக,
நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலை என்ன?
புகார் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் முறையாக உள்ளதா?
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், ரவுடிகள் கண்காணிப்பு குறித்த விவரங்கள்
ஆகியவற்றை கேட்டறிந்தார்.

ஆய்வின்போது காவல் நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் கலந்துரையாடிய ஆணையர்,
காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்கள், குழந்தைகள், முதியோர் தொடர்பான புகார்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
போதைப் பொருள், சட்டவிரோத மது விற்பனை, கஞ்சா விற்பனை போன்ற குற்றங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

தாம்பரம் மாநகரப் பகுதியில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் புதிய ஆணையரின் இந்த நேரடி ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மேடவாக்கம், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, தாம்பரம் போன்ற பகுதிகளில் டாஸ்மார்க் கடைகளால் ஏற்படும் தொல்லைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய ஆணையரின் ஆய்வு தொடர்ந்து மற்ற காவல் நிலையங்களிலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!