சபரிமலை ஐயப்ப பக்தர்களின் மருத்துவத் தேவைகளுக்காக, பம்பை அரசு மருத்துவமனை வளாகத்தில் பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. நவம்பர் 15ஆம் தேதி முதல் ஜனவரி 21ஆம் தேதி வரை 24 மணி நேரமும் இந்த மருத்துவ சேவைகள் தடையின்றி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற மாநில பக்தர்களுக்கு உதவும் வகையில் பல மொழி பேசும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர மருத்துவ உதவிக்கு 04735 203232 என்ற எண்ணில் பக்தர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை பக்தர்கள் வசதிக்காக மருத்துவக் கட்டுப்பாட்டு அறை திறப்பு
