Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு சிபிஎம் ஆர்ப்பாட்டம் 

உள்ளாட்சி அமைப்புகள் முடக்கப்படுவதைக் கண்டித்தும், மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக உள்ளாட்சி நிதிகளை விடுவிக்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (நவம்பர் 17) தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகங்களை முடக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிகளை விடுவிக்க வேண்டும். மாநில நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும்.

மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டுகளில் செய்ய வேண்டிய அடிப்படை வளர்ச்சிப் பணிகளுக்கான நிதியை உடனடியாகவும் முறையாகவும் வழங்க வேண்டும். மழைக்கால வெள்ளப் பெருக்கு அவசரத் தேவைகளைச் சமாளிக்கத் தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தூத்துக்குடி டவுன் திரையரங்கம் 4-வது தெற்கு முதல் 7-வது தெற்கு வரை இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட வீடுகளுக்குக் கணினி பட்டா வழங்கி, நிலவகை மாற்றம் செய்து தூத்துக்குடி மாநகராட்சி தனிமனைச் சான்று வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி மாநகரச் செயலாளர் முத்து தலைமையில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரக்குழு உறுப்பினர்கள் முத்துமாரி, இனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், மாநகரக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், ஆனந்த், கந்தப்பசாமி, கமலா, நாகராஜ், காஸ்ட்ரோ மற்றும் கிளைச் செயலாளர்கள் இராமமூர்த்தி, சசிகுமார், ராம்குமார், மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

error: Content is protected !!