குஜராத்தில் இருந்து தஞ்சைக்கு சரக்கு ரெயிலில் 1566 டன் உரம் வந்தது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என ஆண்டுதோறும் 3 போகங்களில் நெல் சாகுபடி நடைபெறுகிறது.
நெல் சாகுபடியை தவிர உளுந்து, கரும்பு, வாழை, வெற்றிலை, பருத்தி, எள், மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு பயிர்களும் விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது சம்பா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சாகுபடிக்கு தேவையான உரங்கள் பல்வேறு பகுதியிலிருந்து வரவழைக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது .
அதன்படி இன்று குஜராத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 1566 டன் யூரியா உரம் தஞ்சாவூர் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து யூரியா உர மூட்டைகள் தொழிலாளர்கள் மூலம் இறக்கப்பட்டு, லாரிகளில் ஏற்றப்பட்டன. பின்னர் உர மூட்டைகள் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள சொசைட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
