Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பத்தூர் செலந்தம்பள்ளியில் 85 குடும்பங்களுக்கு புதிய மின்மாற்றி!

செலந்தம்பள்ளியில் 85 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் புதிய மின்மாற்றி! சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திருப்பதி தொடங்கி வைத்தார்!

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செலந்தம்பள்ளி கிராமத்தில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வந்த நிலையில், அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய மின்மாற்றி

அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 63 KVA திறன் கொண்ட SS16 புதிய மின்மாற்றி ரூ.2.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு, அதன் மூலம் சுமார் 85 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்பு இதனைத் தொடர்ந்து, புதிய மின்மாற்றியை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ந. திருப்பதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.இந்த மின்மாற்றி

அமைப்பதற்கான முயற்சிகளை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உமாதேவி சரவணன் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சாமிநாதன், அகரம் முன்னாள் தலைவர் வெங்கடேசன், திருப்பதி புரட்சி, அழகிரி,விஜய், உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய மின்மாற்றி பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் செலந்தம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 85 குடும்பங்களின் மின்சாரப் பயன்பாட்டில் ஏற்பட்டிருந்த சிரமங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நிகழ்வில் திருப்பத்தூர் செயற்பொறியாளர் சம்பத் உதவி செயற்பொறியாள நித்யா இளநிலை பொறியாளர் ஆயிஷா மற்றும் மின்சாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!