எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது,
இந்திய விடுதலைப்போரில் தன்னலம் பாராமல் போராடிய கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு நாள் இன்று.
அந்நியர்களை நிலைகுலையச் செய்யும் வகையில் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய சரித்திர சாதனைக்குச் சொந்தக்காரர். வ.உ.சி அவர்களின் உறுதி கண்டு அஞ்சிய ஆங்கிலேயர்கள், அவர் மீது ஏவிய அடக்குமுறைகள் ஏராளம். செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் தியாகத்தையும் – போர்க்குணத்தையும் போற்றுவோம்!
