திருச்செந்தூர் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவின்போது முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்கு ‘அரோகரா’ என முழக்கமிடப்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து, அமைச்சர் மரியல்சன் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்
நவம்பர் 15-ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வில்,
பாடகர் ஒருவர் பக்திப் பரவசத்திற்கு இடையே தமிழக முதலமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் பெயர்களைக் குறிப்பிட்டு ‘அரோகரா’ முழக்கமிட்டது
பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ஆன்மீக மேடையில் தனிநபர்களைத் துதிபாடுவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், ஆன்மீக அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மரியல்சன்,
இத்தகைய செயல்கள் தேவையற்றவை என்றும், அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்
அவர் மேலும் கூறுகையில், “இதெல்லாம் தவிர்க்கப்பட வேண்டிய (அவாய்ட் பண்ணும்)
தேவையில்லாத விஷயங்கள்.
அரசுக்கு இன்னும் நிறைய முக்கியமான பணிகள் செய்ய வேண்டி இருக்கிறது.
பாடகராக இருக்கட்டும், கோயிலுக்கு எந்த வேலையாக வந்தார்களோ, அந்த வேலையை மட்டும் பார்ப்பதுதான் நல்லது.
கோயிலுக்கு வந்த வேலையைச் சரியாகப் பார்க்க வேண்டும்; அதுதான் எல்லாருக்கும் நல்லது. இத்தகைய செயல் நிச்சயம் கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டார்.
