Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆசியான் நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு இலவச இ-விசா ; பிரதமர் அறிவிப்பு

ஆசியான் நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு இலவச இ-விசா ; பிரதமர் அறிவிப்பு

ஆசியான் கூட்டமைப்பு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வரும் பயணியருக்கு இலவச மின்னணு விசா (e-visa) வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற 23-ஆவது இந்தியா – ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசிய இந்திய பிரதமர் மோடி ஆசியான் கூட்டமைப்பைச் சேர்ந்த 11 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு இலவச மின்னணு விசா (Free E-Visa) வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, கிழக்குத் திமோர் (Timor-Leste), மற்றும் வியட்நாம் ஆகிய 11 ஆசியான் உறுப்பு நாடுகளின் குடிமக்கள் இதன் மூலம் பயனடைவர். பிரதமரின் இந்த இலவச இ-விசா அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள நிபுணர்கள் இதன் மூலம் இந்தியாவுக்கும், தென்கிழக்காசிய நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறை மேம்படும் மற்றும் கலாச்சார பரிமாற்றம் மற்றும் இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

error: Content is protected !!