விழுப்புரம்: திண்டிவனத்தில் சாலையோரம் நின்றிருந்த சபரிமலை பக்தர்களின் வேன் மீது ஆம்னி பேருந்து மோதியதில் ஐயப்பன் பக்தர் மற்றும் வேன் ஓட்டுநர் உயிரிழந்தனர். 13 பக்தர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். வேனில் பயணித்தவர்கள் திருவள்ளூர் மாவட்டம் வருதாபுரத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
சாலை விபத்தில் ஐயப்ப பக்தரும் டிரைவரும் உயிரிழப்பு
