கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் விடுதியில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநிலத் துணைத் தலைவர் இராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மாநிலத் தலைவர் செய்தியாளர் சந்திப்பு:
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்பது எல்லா மக்களின் கோரிக்கை, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீபம் ஏற்றினாலே எங்களுக்கு போதும்.
ஆனால் இதற்கு முதல்வருக்கு பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இது தீபத் தூண் இல்லை என்று நீதிமன்றத்தில் வாதிடுகிறார்கள். 1923ம் ஆண்டு முதல் வழக்கு ஆரம்பித்து, 1996 தீபம் ஏற்றலாம் என தீர்ப்பு வந்துள்ளது.
2026 அதே தீர்பை உறுதி செய்து இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றமும் அதை உறுது செய்துள்ளது.
தலைமை நீதிமன்றம் சொல்லியும் ஏன் ஏற்க மறுக்குறீர்கள். தீபம் ஏற்றுவதில் என்ன பிரச்சினை, முதல்வர் கோவிலுக்கு செல்வது பகல் வேசமா,
whatsapp குறுஞ்செய்தி விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பிரச்சினைகளுக்கு பதில் என்ன,
6 மாத காலத்தில் பொது மக்கள் விரோதி சட்டம் ஒழுங்கு, போதஒ பொருள் புழக்கம், முழுக்க முழுக்க தவறு செய்து கொண்டிருக்கிறீர்கள். யாரை காப்பாற்ற என்று தெரியவில்லை.
காவிரி மேலாண்மை ஆணையம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. தண்ணீர் திறக்க வேண்டியது காங்கிரஸ் முதல்வர்,
பகல் வேசம் போடுகிறார் முதல்வர். நாளை திருக்கார்த்திகை சொக்கப்பனை கொழுத்துவது, தீபம் ஏற்றுவது போன்ற ஐதீகம். இந்த ஆண்டு ஏற்றுங்கள், அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளளாம் என்று கூறியும், முதல்வர் மறைக்கிறார்.
எனக்கு எல்லா மதமும் சம்மதம்,
நீதிமன்ற தீர்ப்பை ஏன் முதல்வர் நிறைவேற்ற முடியவில்லை அதில் என்ன சிரமம் உங்களுக்கு இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த விளைவுகள் இந்த ஆட்சியை வெகு விரைவில் விபரீதங்கள் நடக்கும் எனக் கூறினார்.
