Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சபரிமலை ஆன்லைன் முன்பதிவில் ஆதார் ஓடிபி கட்டாயம்

சபரிமலை ஆன்லைன் முன் பதிவில் கட்டுப்பாடுகள் கடுமையாகிறது. முன்பதிவு செய்த நாளில் வாராதவர்களுக்கு மீண்டும் முன்பதிவு செய்ய அனுமதி இல்லை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கடந்த 16 ஆம் தேதி மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் சுமார் 3.40 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு இதே நாட்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில் சபரிமலை தரிசனத்திற்கான போலி முன்பதிவுகளைத் தடுக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதன்படி, ஆதார் இணைக்கப்பட்ட எண்ணுக்கு வரும் OTP மூலமே இனி ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும்; முன்பதிவு செய்துவிட்டு வராதவர்கள் இந்த சீசனில் மீண்டும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாது, மாறாக உடனடி தரிசன முறையில் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வர முடியாதவர்கள் முன்கூட்டியே முன்பதிவை ரத்து செய்யவோ அல்லது தேதியை மாற்றவோ வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பம்பையில் செயல்பட்ட உடனடி முன்பதிவு மையம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பக்தர்களின் அவசர உதவிக்காகக் கேரள காவல்துறை 24 மணி நேர சிறப்பு உதவி மையத்தைத் தொடங்கியுள்ளது.

error: Content is protected !!
Secret Link