Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 3 பேர் கைது- திருச்சி க்ரைம்

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 3 பேர் கைது- திருச்சி க்ரைம்

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 3 பேர் கைது

திருச்சி டிவிஎஸ் நகர், ராஜம் தெரு, பகுதியைச் சேர்ந்தவர் முகமது இசாக் (வயது50). இவரும், இவரது மனைவி ரஹீமாவும் கடந்த 16 ஆம் தேதி வீட்டில் இருந்துள்ளனர். அப்போது வீட்டின் மாடியில் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் பணியில் முகமது இசாக் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ​அந்த நேரத்தில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இருவர், ரஹீமா அணிந்திருந்த அரை பவுன் தங்கச் செயினைப் பறிக்க முயன்றுள்ளனர். அவர் சத்தம் போட்டதைத் தொடர்ந்து, படுக்கையறையிலிருந்து முகமது இசாக் வெளியே வந்துள்ளார். இதையடுத்து, பறித்த செயினை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ​இந்த சம்பவம்கேகே நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக திருச்சி ஜே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் (23), பாண்டியன் தெருவைச் சேர்ந்த அன்சாரி ராஜா (35), காஜாமலை டிவிஎஸ் நகரைச் சேர்ந்த ஆசிக் என்ற கமல் முகமது (32) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாலிபரிடம் பணம், செல்போன் பறிப்பு- 2 பேர் கைது

திருச்சியை லால்குடி அருகே நாகர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது42). இவர் கடந்த 19 ஆம் தேதி அன்று பட்டர்வொர்த் சாலை, ஆஞ்சநேயர் கோவில் சந்து அருகே சென்று கொண்டிருந்தார். ​அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், கட்டையாலும் கையாலும் சிவக்குமாரைத் தாக்கியுள்ளனர். பின்னர் அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்த ரூ. 2,540 ரொக்கப் பணம் மற்றும் ரூ. 1,000 மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர். ​இது தொடர்பான புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை வந்த நிலையில், சிந்தாமணி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குரு (வயது20) மற்றும் சிந்தாமணியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மற்றொரு நபரான குணா (வயது22) என்பவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

பெண்ணிடம் 16 பவுன் நகைநூதன முறையில் திருட்டு- 3 பல பெண்களுக்கு வலைவீச்சு

திருச்சி கே.கே. நகர் எஸ்.எம்.இ.எஸ்.இ காலனி 3-வது தெருவைச் சேர்ந்த ரமேஷ் (வயது52) இவரது மனைவி சுரேகா. இவர் கடந்த 19 ஆம் தேதி தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள தனது சகோதரர் சக்திவேல் வீட்டிற்குச் செல்வதற்காகக் புறப்பட்டு அக்கம் பக்கத்தைச் சேர்ந்த 2 நபர்களுடன் சுரேகா ஆட்டோவில் பயணித்து மன்னார்புரம் சென்று இறங்கியுள்ளார். பிறகு அங்கிருந்து திண்டுக்கல் செல்லும் பேருந்தில் சுரேகா ஏறியுள்ளார். அதே பேருந்தில் வையம்பட்டியைச் சேர்ந்த அடையாளம் தெரியாத 3 பெண்களும் ஏறியதாகக் கூறப்படுகிறது.
​அப்போது சுரேகா அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவர், கீழே நாணயம் ஒன்றைப் போட்டு அதை எடுக்குமாறு கூறிள்ளார். இந்நிலையில் சுரேகாவின் கவனத்தைத் திசைதிருப்பி அவர் குனிந்து நாணயத்தை எடுத்த நேரத்தில், அந்த 3 பெண்கள் வடமதுரையில்திடீரென இறங்கிச் சென்றுள்ளனர். பின்னர் சுரேகா திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இறங்கி குமுளி பேருந்து மூலம் கம்பத்தில் உள்ள சகோதரர் சக்திவேல் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
​அங்கு சென்ற பிறகுதான், சுரேகா தான் வைத்திருந்த தங்க நகைகளைபையில் இருந்து எடுக்க முயன்ற போது தங்க நகை காணாமல் போய் இருப்பது கண்டு அதிர்ச்சிடைந்தார். பிறகு தங்க நகை திருட்டு போனது தெரியவந்துள் வளது.பிறகு ஊருக்கு திரும்பிய
சுரேகாகேகே நகர் போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ நடந்த இடம் தேனி மாவட்டம் என்பதால் இந்த வழக்கை
தேனி மாவட்டம் கம்பம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடிய அடையாளம் தெரியாத 3 பெண்களைதேடி வருகின்றனர்.

அரசு பஸ் டிரைவருக்கு கத்திக்குத்து– மதுபோதையில் தகராறு செய்த வாலிபர் கைது

​திருச்சியில் அரசு பஸ் டிரைவரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்

​திருச்சியை அடுத்த லால்குடி பணிமனையில் அரசு பஸ் டிரைவராக பணிபுரிபவர் திவாகர் ( 43). இவர் ​நேற்று முன்தினம் அதிகாலை 4.10 மணியளவில், அரசு பஸ்சைலால்குடியில் இருந்து திருச்சிக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, திருச்சி கரியமாணிக்கம் அருகே உள்ள சிறுகம்பூர் செந்தாமரைக்காள்குடியைச் சேர்ந்த பாலராஜ் மகன் சசி பாலாஜி (வயது26) என்பவர் மதுபோதையில் பஸ்சில் பயணம் செய்துள்ளார். இந்தஅரசு பஸ் திருச்சி
​ஈ.வி.ஆர். சாலையில் உள்ள எம்.ஜி.எம். அரசு மருத்துவமனை பஸ் நிறுத்ததில்வரும்பொழுது இறங்குவது தொடர்பாக, டிரைவர் திவாகருக்கும் சசி பாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சசி பாலாஜி, டிரைவரை ஆபாசமாக திட்டி, கத்தி,கையால் தாக்கி, பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
​இந்த தாக்குதலில் திவாகருக்கு கழுத்து மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
​இதுகுறித்த புகாரின் பேரில்அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்போது திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை கீழத் தெருவில் வசித்து வரும் சசி பாலாஜியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!
Secret Link