Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீரங்கம் கோயிலில் மயங்கி விழுந்த பெங்களூரு பக்தர் உயிரிழப்பு!

ஸ்ரீரங்கம் கோயிலில் மயங்கி விழுந்த பெங்களூரு பக்தர் உயிரிழப்பு!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பெங்களூரு பக்தர் திடீரென்று மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம்குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு போஸ்டல் காலனி 4வது கிராஸ் பகுதி சேர்ந்தவர்
ராமகிருஷ்ணன் (வயது 61) இவர் தனது நண்பர்களுடன் பெங்களூரூரில் இருந்து நேற்று திருச்சி வருகை புரிந்தார். பிறகு திருச்சியில் இருந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.தெற்கு உத்தர விதி பகுதியில் தனது நண்பர்களுடன்ராமகிருஷ்ணன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்து பார்த்த பொழுது ராமகிருஷ்ணன் இறந்து விட்டதாக டாக்டர் கூறினார். இந்த சம்பவம் குறித்து அவருடையை மனைவி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link