திருப்பரங்குன்றம் நோக்கி சென்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையிலிருந்து திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் இடத்திற்கு செல்ல முற்படும்பொழுது தாழையூத்து என்னும் இடத்தில் அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர். காவல்துறை தற்பொழுது நயினார் நாகேந்திரனை கைது செய்து அழைத்து செல்கிறது. வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில் நெல்லையில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்ட நயினார் நாகேந்திரன் கைது செய்யபட்டார்.
